ஐரோப்பாவில் ‘விஜய் 61’ ஷூட்டிங் ஓவர்

‘பைரவா’ படத்திற்கு பிறகு விஜய்-யின் 61-வது படத்தை அட்லி இயக்குகிறார். ‘பாகுபலி’ புகழ் கே.விஜயேந்திர பிரசாத்தும் அட்லியுடன் சேர்ந்து திரைக்கதை எழுதியுள்ளாராம். இப்படத்தை ‘ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இதில் இளைய தளபதிக்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். முதல் முறையாக ‘இளைய தளபதி’, ‘விஜய் 61’யில் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார். 

மேலும், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், ‘பாடி பில்டர்’ காமராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இதற்கு விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ஐரோப்பாவில் கடந்த 30 நாட்களாக நடந்து வந்த படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அடுத்த மாதம் சென்னையில் 6-ஆம் கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூன் 22-ஆம் தேதியும்,ஆடியோவை ஆகஸ்டிலும், படத்தை அக்டோபர் மாதம் தீபாவளிக்கும் வெளியிடவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *