கலையரசனின் ‘உரு’ எப்போது வெளியீடு?

‘எய்தவன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு கலையரசன் கைவசம் ‘காலக்கூத்து, சைனா, உரு, களவு, பட்டினப்பாக்கம்’ ஆகிய படங்கள் உள்ளது. இதில் ‘உரு’ படத்தை விக்கி ஆனந்த் என்பவர் இயக்கி வருகிறார்.

கலைக்கு ஜோடியாக தன்ஷிகா நடித்துள்ளார். ஜோகன் இசையமைத்துள்ள இதனை ‘வையம் மீடியாஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் போஸ்டர்ஸ், டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. படத்தை வருகிற ஜூன் மாதம் 16-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *