‘மகேஷிண்டே பிரதிகாரம்’ ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின்

‘சரவணன் இருக்க பயமேன்’ படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் கைவசம் ‘இப்படை வெல்லும், பொதுவாக எம்மனசு தங்கம், ‘இரும்பு திரை’ மித்ரன் படம்’ ஆகிய 3 படங்கள் உள்ளது. தற்போது, இன்னொரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் உதயநிதி. இன்னும் பெயரிடப்படாத இதனை ப்ரியதர்ஷன் இயக்கவுள்ளாராம். இது பகத் ஃபாஸிலின் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ மலையாள படத்தின் ரீமேக்காம்.

‘மூன்சாட் எண்டர்டெயின்மென்ட்’ சார்பில் சந்தோஷ் தயாரிக்கவுள்ள இப்படத்தில் ஹீரோயினாக நமிதா பிரமோத் நடிக்கவுள்ளார். இதர நடிகர்கள் மற்றும் டெக்னிஷியன்களின் விவரம் விரைவில் வெளியாகுமாம்.

படத்தின் படப்பிடிப்பை ஜூலை 15­-ஆம் தேதி முதல் தேனி மாவட்டத்தில் தொடங்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *