அஷ்வினின் ‘திரி’ எப்போது ரிலீஸ்?

‘ஜீரோ’ படத்திற்கு பிறகு அஷ்வின் ‘திரி, தொலைக்காட்சி, இது வேதாளம் சொல்லும் கதை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘திரி’ படத்தை அசோக் அமிர்தராஜ் என்பவர் இயக்கியுள்ளார். அஷ்வினுக்கு ஜோடியாக சுவாதி ரெட்டி நடித்துள்ளார்.

அஜீஸ் இசையமைத்து வரும் இதனை ‘ஷீ ஷோர் கோல்ட் புரொடக்ஷன்’ என்ற புதிய நிறுவனம் சார்பில் பாலமுருகன் மற்றும் பாலாகோபி தயாரித்து வருகின்றனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தை வருகிற ஜூலை மாதம் 7-ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *