‘நரகாசூரன்’ படத்தில் ‘மாநகரம்’ ஹீரோ

22 வயதுள்ள புதுமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கி சமீபத்தில் ரிலீஸான படம் ‘துருவங்கள் 16’. க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படத்தில் நடிகர் ரகுமான் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில், தனது அடுத்த படம் ‘நரகா சூரன்’ குறித்த அப்டேட்டை ஷேரிட்டார் கார்த்திக் நரேன்.

இதனை இயக்குனர் கெளதம் மேனனின் ‘ஒன்றாக எண்டர்டெயின்மென்ட்’-வுடன் இணைந்து கார்த்திக் தனது ‘க்நைட் நாஸ்டாலஜியா பிலிமோடெயின்மென்ட்’ மூலம் தயாரிக்கிறார். ‘நரகாசூரன்’-யில் அரவிந்த் சாமி ஹீரோவாகவும், முக்கிய கதாபாத்திரங்களில் மலையாள நடிகர் இந்திரஜித்தும், நடிகை ஸ்ரேயாவும் நடிக்கவுள்ளனர். தற்போது, ‘யாருடா மகேஷ்’ சந்தீப் கிஷன்னும் இதில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது நாகசைத்தன்யா நடிக்கத் தவறிய வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *