‘ஸ்பைடர்’ அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழில் ‘கத்தி’ படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஸ்பைடர்’. கதையின் நாயகனாக மகேஷ் பாபு நடிக்கும் இப்படம் தெலுங்கிலும் ரெடியாகிறது. மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும்,  எஸ்.ஜே.சூர்யா, பரத் வில்லனாக நடித்து வருகின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் மோஷன் போஸ்டர் ஏற்கெனவே வெளியாகி மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. ‘என்.வி.ஆர். சினிமா’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. படத்தை செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதியும், டீசரை மே 31-ஆம் தேதியும் வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *