வெளியானது ‘ராஜா ரங்குஸ்கி’ பர்ஸ்ட் லுக் & மோஷன் போஸ்டர்

‘ஜாக்சன் துரை’ படத்திற்கு பிறகு இயக்குநர் தரணிதரன் இயக்கத்தில் ரெடியாகி வரும் படம் ‘ராஜா ரங்குஸ்கி’.இதில் ‘மெட்ரோ’ சிரிஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார்.

‘வாசன் புரொடக்ஷன்’வுடன் இணைந்து ‘பர்மா டாக்கீஸ்’ மூலம் தரணிதரனே தயாரித்தும் வருகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதன் படப்பிடிப்பை சமீபத்தில் சிறப்பாக நிறைவு செய்தது படக்குழு. தற்போது, படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. நேற்று இரவு பர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இன்று காலை மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இந்த பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *