‘சாஹோ’வில் ஏ.ஆர்.முருகதாஸ் பட வில்லன்

‘ரிபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடித்த ‘பாகுபலி 2’ 1500 கோடிக்குமேல் வசூல் செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரபாஸின் 19-வது படத்தை சுஜித் இயக்குகிறார். ‘சாஹோ’ என தலைப்பிட்டுள்ள இப்படத்தை ‘பாகுபலி’ போலவே பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது ‘யுவி கிரியேஷன்ஸ்’ நிறுவனம்.

ஷங்கர்-எஹ்சான்-லாய் இணைந்து இசையமைக்கும் இதற்கு மதி ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர், பிரபாஸ் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்ததாம். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இதில் வில்லனாக நடிக்க ‘கத்தி’ பட புகழ் நீல் நிதின் முகேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *