‘குரங்கு பொம்மை’ இசை வெளியீடு எப்போது?

‘குற்றமே தண்டனை’ படத்திற்கு பிறகு விதார்த் கைவசம் ‘விழித்திரு, குரங்கு பொம்மை, ஒரு கிடாயின் கருணை மனு’ என 3 படங்கள் இருக்கிறது. இதில் நித்திலன் இயக்கும் ‘குரங்கு பொம்மை’ படத்தில் டெல்னா டேவிஸ் விதார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா நடித்துள்ளார்.

அஜநீஷ் லோக்நாத் இசையமைத்துவரும் இதனை ‘ஸ்ரேயாஸ்ரீ மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் ஆடியோவை வருகிற ஜூன் மாதம் 4-ஆம் தேதி சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் வெளியிடவுள்ளனர். படத்தின் இசை உரிமையை யுவன் ஷங்கர் ராஜா தனது ‘U1 ரெக்கார்ட்ஸ்’ மூலம் ஏற்கெனவே வாங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *