‘குயின்’ ஆகப்போகிறார் காஜல் அகர்வால்

ஹிந்தியில் கங்கனா ரனாவத் நடித்த ‘குயின்’ படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்திற்காக கங்கனா தேசிய விருதும் பெற்றார். இதன் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட ரீமேக் உரிமையை   தியாகராஜன் வாங்கியிருந்தார்.

தமிழ் குயினில் நடிக்க முதலில் தமன்னா ஒப்பந்தமானார். தற்போது, தமன்னாவுக்கு பதிலாக காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கவுள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் எமி ஜாக்சன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னிஷியன்களின் விவரம் விரைவில் வெளியாகுமாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *