இரவுக்கு ஆயிரம் கண்கள்’ டீசர் எப்போது?

‘பிருந்தாவனம்’ படத்திற்கு பிறகு அருள்நிதி நடித்து வரும் படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. மாறன் இயக்கி வரும் இதில் ஹீரோயினாக ‘சாட்டை’ மகிமா நம்பியார் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆனந்தராஜ், அஜ்மல் நடிக்கின்றனர்.

விஷால் சந்திரசேகர் இசையமைத்து வரும் இதனை ‘ஆக்சஸ் பிலிம் பேக்டரி’ நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை ஜூன் 3-ஆம் தேதி வெளியிடவுள்ளனர். இதனைத் தொடர்ந்து ராதாமோகன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளாராம் அருள்நிதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *