தொடங்கியது ‘AAA’ படத்தின் இன்ட்ரோ பாடல்

‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு பிறகு சிம்பு நடித்து வரும் படம் ‘அன்பானவன்அசராதவன் அடங்காதவன்’. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆதிக் இயக்கிவரும் இப்படத்தை ‘குளோபல் இன்போடைன்மென்ட்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதில் ஸ்ரேயா, தமன்னா, சனா கான், நீத்து சந்திரா நடித்து வருகின்றனர்.

சிறப்பு தோற்றத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். சிம்பு நான்கு வித்தியாசமான ரோல்களில் நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறதாம். முதல் பாகத்தை ஜூன் 23-ஆம் தேதி ரம்ஜான் ட்ரீட்டாக வெளியிடவுள்ளனர்.

சமீபத்தில், ரிலீஸான படத்தின் 2 டீசர்கள் மற்றும் ஒரு பாடல் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த படத்தின் இன்ட்ரோ பாடலான ‘ரத்தம் என் ரத்தம்’-ஐ சென்னையில் படமாக்கி வருகின்றனர். இப்பாடலின் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். சிம்புவுடன் வைரமுத்து கூட்டணி அமைத்துள்ள முதல் படம் ‘AAA’-வாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *