வைரல் ட்ரெண்டான ஆர்யாவின் ‘சந்தனத்தேவன்’ பர்ஸ்ட் லுக்!

‘பெங்களூர் நாட்கள்’ படத்திற்கு பிறகு ஆர்யா கைவசம் ‘கடம்பன், சங்கமித்ரா, சந்தனத்தேவன்’ ஆகிய படங்கள் உள்ளது. இதில் ‘சந்தனத் தேவன்’ படத்தை அமீர் இயக்கவுள்ளார்.

மேலும், ஆர்யாவுடன் அவரது தம்பி சத்யாவும், இயக்குநர் அமீரும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். ஹீரோயினாக ‘பட்டதாரி’ அதிதி நடிக்கவுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ள இதற்கு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

‘அமீர் பிலிம் கார்ப்பரேஷன்’வுடன் இணைந்து பிரசாத் சுக்காபலி பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தின் கதைக்களம் ஜல்லிக்கட்டு சம்மந்தப்பட்டதாம். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று ரிலீஸாகி ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரல் ட்ரெண்டு அடித்து வருகிறது. இதன் ஒரு பாடலை நாளை காலை பதிவு செய்து, மாலையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடவுள்ளது படக்குழு. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *