வெளியானது ‘இப்படை வெல்லும்’ போஸ்டர்ஸ்

‘சரவணன் இருக்க பயமேன்’ படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் கைவசம் ‘இப்படை வெல்லும்,  பொதுவாக எம்மனசு தங்கம்’ ஆகிய படங்கள் உள்ளன. இதில் கெளரவ் இயக்கி வரும் ‘இப்படை வெல்லும்’படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். மேலும், ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி வில்லன் வேடங்களில் நடித்துளனர்.

‘லைகா புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். ஆக்ஷன் த்ரில்லராக ரெடியாகிவரும் இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் ரிலீஸ் செய்துள்ளார். இந்த போஸ்டர்கள் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *