வெங்கட் பிரபுவின் புது படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் கடந்த வருடம் இறுதியில் வெளியான படம் ‘சென்னை – 28 : செகண்ட் இன்னிங்க்ஸ்’. ‘சென்னை – 28’யின் தொடர்ச்சியான இப்படமும் முதல் பாகம் போல் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது, வெங்கட் பிரபு புதிய படமொன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தில் ‘இதுதாண்டா போலீஸ்’ புகழ் ராஜசேகர் நடிக்கவுள்ளார். இவர் தெலுங்கில் ‘PSV கருட வேகா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். இது ராஜசேகர் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்கும் நேரடி தமிழ் படமாம். படத்தின் இதர தகவல்கள் விரைவில் வெளியாகுமாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *