விஷாலின் ‘சண்டக்கோழி 2’ பரபர அப்டேட்ஸ்!

‘கத்தி சண்டை’ படத்திற்கு பிறகு விஷால் கைவசம் ‘துப்பறிவாளன், இரும்பு திரை, சண்டக்கோழி 2’ ஆகிய படங்கள் உள்ளது. இதில் ‘சண்டக்கோழி 2’ படத்தை லிங்குசாமி இயக்கவுள்ளார். இதன் முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 


‘சண்டக்கோழி 2’-வில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ள இதற்கு மதி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற பிப்ரவரி மூன்றாம் வாரத்தில் துவங்கவுள்ளது படக்குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *