‘விஜய் 61’யில் இணைந்த சத்யன்!

‘பைரவா’ படத்திற்கு பிறகு விஜய்-யின் 61-வது படத்தை அட்லி இயக்கவுள்ளார். ‘பாகுபலி’ புகழ் கே.விஜயேந்திர பிரசாத்தும் அட்லியுடன் இணைந்து கதை-திரைக்கதை எழுதியுள்ளாராம். இப்படத்தை ‘ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இதில் இளைய தளபதிக்கு ஜோடியாக நடிக்க ஜோதிகா, சமந்தா, காஜல் அகர்வால் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளனர்.

காமெடிக்கு வடிவேலு நடிக்கவுள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. இந்நிலையில், ‘சச்சின், வேட்டைக்காரன், நண்பன், அழகிய தமிழ்மகன், துப்பாக்கி’ ஆகிய படங்களுக்கு பிறகு சத்யன் ‘விஜய் 61’-யில் காமெடியில் அசத்த கமிட்டாகியுள்ளதாக சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் ஷூட்டிங்கை பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் துவங்கவுள்ளனராம். மேலும், இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் விரைவில் ட்விட்டப்படுமாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *