விஜய் ஆண்டனியின் ‘எமன்’ எப்போது ரிலீஸ்?

‘சைத்தான்’ படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் ‘எமன்’. இப்படத்தை ‘நான்’ புகழ் ஜீவா ஷங்கர் இயக்கி வருகிறார். ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்’வுடன் இனைந்து ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.


இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் டூயட் பாடி ஆடி வருகிறார். பொலிட்டிக்கல் த்ரில்லரான இப்படத்தில் விஜய் ஆண்டனி இரண்டு வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நம்மை மிரட்டும் வில்லன் வேடத்தில் பிரபல இயக்குநர் தியாகராஜன் நடித்துள்ளாராம்.


சமீபத்தில் வெளியான ‘என்மேல கைவச்சா காலி’ எனும் பாடல் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்தது. இந்நிலையில், படத்தை வருகிற பிப்ரவரி மூன்றாம் வாரத்தில் அதாவது பிப்ரவரி 16 அல்லது 17-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *