முத்த காட்சிக்கு நோ சொன்ன சிபி

‘கட்டப்பாவ காணோம்’ படத்திற்கு பிறகு சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சத்யா’. ‘சைத்தான்’ இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வரும் இப்படம் ‘க்ஷணம்’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் வெர்ஷனாம். சிபிராஜுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும், வரலக்ஷ்மி, ஆனந்தராஜ், சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

சைமன் இசையமைத்து வரும் இதனை ‘நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் நடிகர் சத்யராஜ் தயாரிக்கிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. ‘சத்யா’ குறித்து இயக்குனர் பிரதீப் கூறுகையில்,  படத்துல உங்களுக்கும் ரம்யா நம்பீசனுக்கும் ஒரு முத்த காட்சி இருக்கு நடிங்கன்னு சிபியிடம் கூறினேன். அதற்கு சிபி, என்னால் அந்த முத்த காட்சியில் நடிக்க முடியாது. ஏனெனில், எனக்கு 4 வயசுல ஒரு பையன் இருக்கான். அவனோட தியேட்டர்ல போய் அந்த முத்த காட்சியை பார்க்க முடியாதுன்னு சொன்னார். படத்தை ஜூன் மாதத்தில் வெளியிடவுள்ளனராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *