மீண்டும் வைரல் ட்ரெண்டுக்கு ரெடியான ‘டோரா’!

‘காஷ்மோரா’ படத்திற்கு பிறகு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா கைவசம் ‘டோரா, இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர் காலம்’ ஆகிய படங்கள் உள்ளது. இதில் ‘டோரா’ படத்தை தாஸ் ராமசாமி இயக்கி வருகிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இதற்கு விவேக் – மெர்வின் இசையமைத்து வருகின்றனர்.


சமீபத்தில் வெளியான இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் ‘எங்கபோற டோரா’ எனும் ஒரு பாடல் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்தது. இந்நிலையில், படத்தில் இடம்பெறும் ‘வாழவிடு’ எனும் மற்றுமொரு பாடலை வருகிற ஜனவரி 6-ஆம் தேதி ரிலீஸ் செய்து வைரல் ட்ரெண்டாக்க திட்டமிட்டுள்ளது ‘டோரா’ டீம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *