மீண்டும் தள்ளிப் போகிறதா சூர்யாவின் ‘சி 3’?

‘24’ படத்திற்கு பிறகு பிறகு சூர்யா கைவசம் ‘சி 3, தானா சேர்ந்த கூட்டம், செல்வராகவன் படம்’ ஆகியவை உள்ளது. இதில் ‘சி 3’ படத்தை ஹரி இயக்கியுள்ளார். சிங்கம் பாகங்களின் தொடர்ச்சியான இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் என டபுள் ஹீரோயின்ஸாம்.

நம்மை மிரட்டும் வில்லன் வேடத்தில் தாகூர் அனுப் சிங் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இதன் பாடல்கள் & டீசர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘ஸ்டுடியோ கிரீன் – பெண் மூவீஸ்’-வுடன் இணைந்து ‘ஆதனா ஆர்ட்ஸ் புரொடக்ஷன்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ள ‘சி 3’-யை பார்த்த சென்சார் குழுவினரும் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

ஏற்கெனவே, இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன நிலையில் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், மறுபடியும் இந்த வாரம் படம் வெளியாகாது என பல மீடியாக்களில் பரவி வருகிறது. இந்நிலையில், எந்த தடையுமின்றி அறிவித்த தேதியில் படம் ரிலீஸாகும் என ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் ட்விட்டியுள்ளது. படத்தின் அட்வான்ஸ் புக்கிங் நேற்று முதல் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *