மீண்டும் ‘காக்கா முட்டை’ இயக்குனருடன் கைகோர்க்கும் ஜி.வி.பிரகாஷ்!

‘ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை’ படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் மணிகண்டன், தனது ‘கடைசி விவசாயி’ படத்தின் பணிகளில் பிஸியாகவுள்ளார். இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுடன் கைகோர்க்கவுள்ளாராம் மணி.

‘காக்கா முட்டை’ படத்திற்கு இசை ஜி.வி தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த முறை இசையுடன் சேர்த்து படத்தின் ஹீரோவாகவும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளாராம். ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிரகாஷ் தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராகி விட்டார். ஜி.வி.பி – மணிகண்டன் இணையவுள்ள படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் ட்விட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *