மீண்டும் இணையும் ஹிட் காம்போ!

‘றெக்க’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடித்து ரிலீஸுக்கு வெயிடிங் லிஸ்டில் உள்ள படங்கள் ‘புரியாத புதிர், இடம் பொருள் ஏவல், கவன்’. இதுமட்டுமின்றி கைவசம் ‘வடசென்னை, அநீதி கதைகள், விக்ரம் வேதா, 96’ ஆகிய படங்கள் உள்ளது.


இதனைத் தொடர்ந்து மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் விஜய் சேதுபதி. இப்படத்தை ‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ பட இயக்குனர் அருண் குமார் இயக்கவுள்ளாராம். இவர்கள் இருவரும் இணையும் மூன்றாவது படம் என்பதால், இப்பொழுதே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. வெகு விரைவில் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *