மீண்டும் இணையும் கலக்கல் ஹிட் காம்போ!

‘தில்லுக்கு துட்டு’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு சந்தானம் கைவசம் ‘சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும், சக்க போடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் சந்தானம்.

இதனை ‘எஸ்.எம்.எஸ்.’ புகழ் எம்.ராஜேஷ் இயக்கவுள்ளார். ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை தவிர, ராஜேஷின் எல்லா படங்களிலும் சந்தானத்தின் காமெடி பெரிய சப்போர்டிவாக இருந்தது. கடைசியாக வந்த ராஜேஷின் மூன்று படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இந்தமுறை ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார் ராஜேஷ். ஆகையால், மீண்டும் சந்தானத்துடன் கைகோர்த்துள்ளார்.

காமெடி எண்டர்டெயினராக ரெடியாகவுள்ள இப்படத்தை ‘ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளதாம். படத்தின் தலைப்பு, இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *