‘பைரவா’வுக்கு கிடைத்த கிரீன் சிக்னல்!

‘தெறி’ படத்திற்கு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பைரவா’. ‘அழகிய தமிழ்மகன்’ புகழ் பரதன் இதனை பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார். இளைய தளபதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.


‘விஜயா புரொடக்ஷன்ஸ்’ தயாரித்துள்ள இப்படத்தை வருகிற ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக வெளியிடவுள்ளது ‘ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இதன் டீசர், பாடல்கள், டிரைலர் ஏற்கெனவே ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நேற்று படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்து க்ரீன் சிக்னலிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *