பிரம்மாண்ட இயக்குநரின் பாராட்டை பெற்ற ‘துருவங்கள் பதினாறு’!

22 வயதுள்ள அறிமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கி கடந்த வாரம் ரிலீஸான படம் ‘துருவங்கள் பதினாறு’. க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படத்தில் நடிகர் ரகுமான் ஹீரோவாக நடித்திருந்தார். ‘க்நைட் நாஸ்டாலஜியா பிலிமோடேயின்மென்ட்’ தயாரித்துள்ள இதனை ‘ட்ரீம் பேக்டரி’ மற்றும் ‘வீனஸ் இன்போடேயின்மென்ட்’ நிறுவனங்கள் இனைந்து வெளியிட்டது.


இப்படம் ரசிகர்களிடமும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், பிரபல இயக்குநர் ஷங்கர் ‘துருவங்கள் பதினாறு’ படத்தை பார்த்து மிகவும் ரசித்ததாகவும், மேலும் இப்படக்குழுவை வெகுவாக பாராட்டியும் ட்விட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *