நிக்கி கல்ராணியின் 25-வது பட அப்டேட்!

‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்திற்கு பிறகு நடிகை நிக்கி கல்ராணி கைவசம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா, கீ, ஹரஹர மகாதேவகி’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘நெருப்புடா’-வில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நிக்கி.

இதனையடுத்து விக்ரம் பிரபு நடிக்கவுள்ள மற்றுமொரு புதிய படத்திலும் நிக்கியே நாயகியாக டூயட் பாடி ஆட கமிட்டாகியுள்ளாராம். ‘பக்கா’ என தலைப்பிட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் சூர்யா இயக்கவுள்ளார். தனது 25-வது படமான ‘பக்கா’-வில் நிக்கி கல்ராணி ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகையாக வலம் வரவுள்ளாராம். படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *