ஜெயம் ரவியின் ‘போகன்’ ரிலீஸில் மாற்றம்!

‘மிருதன்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவி கைவசம் ‘போகன், டிக் டிக் டிக், வனமகன், சங்கமித்ரா’ ஆகிய படங்கள் உள்ளது. இதில் ‘போகன்’ படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ லக்ஷ்மன் இயக்கியுள்ளார்.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஹன்ஷிகா நடித்துள்ளார். மேலும், அரவிந்த் சாமி, அக்ஷரா கௌடா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள், டீசர் & டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ தயாரித்துள்ள ‘போகன்’-ஐ பார்த்த சென்சார் குழுவினரும் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தை வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி ‘ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் வெளியிட திட்டமிட்டிருந்தது. தற்போது, அதே நாள் சூர்யாவின் ‘சி 3’-யும் ரிலீஸாவதால், ‘போகன்’-ஐ பிப்ரவரி 2-ஆம் தேதியே ரிலீஸ் செய்யவுள்ளதாக ஜெயம் ரவி ட்விட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *