ஜி.வி.பிரகாஷின் புதிய பட டைட்டில் இதுவா?

‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் கைவசம் ‘புரூஸ் லீ, அடங்காதே, 4ஜி, சர்வம் தாள மயம், ராம்பாலா படம், சசி படம்’ ஆகியவை உள்ளன. இதனைத் தொடர்ந்து மற்றுமொரு புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார் ஜி.வி.

‘ஈட்டி’ புகழ் ரவி அரசு இயக்கவுள்ள இதன் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று இரவு 9 மணிக்கு இயக்குனர் வெற்றிமாறன் ட்விட்டவுள்ளாராம். ‘காமன் மேன்’ நிறுவனம் சார்பில் பி.கணேஷ் தயாரிக்கவுள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘ப்ரேமம்’ புகழ் மடோனா செபாஸ்டின் நடிக்கவுள்ளார்.

தற்போது, படத்தின் டைட்டில் ‘ஐங்கரன்’ என தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு நம்மை வெயிட்டிங்கில் வைத்திருக்கிறார் ‘வெர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *