சூர்யாவின் ‘சி 3’-க்கு கிடைத்த கிரீன் சிக்னல்!

‘24’ படத்திற்கு பிறகு பிறகு சூர்யா கைவசம் ‘சி 3, தானா சேர்ந்த கூட்டம், செல்வராகவன் படம்’ ஆகியவை உள்ளது. இதில் ‘சி 3’ படத்தை ஹரி இயக்கியுள்ளார். சிங்கம் பாகங்களின் தொடர்ச்சியான இப்படம் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் என டபுள் ஹீரோயின்ஸாம். நம்மை மிரட்டும் வில்லன் வேடத்தில் தாகூர் அனுப் சிங் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இதன் பாடல்கள் & டீசர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

‘ஸ்டுடியோ கிரீன் – பெண் மூவீஸ்’-வுடன் இணைந்து ‘ஆதனா ஆர்ட்ஸ் புரொடக்ஷன்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ள ‘சி 3’-யை பார்த்த சென்சார் குழுவினரும் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்நிலையில், படத்திற்கு 30% கேளிக்கை வரிச்சலுகையும் தமிழக அரசிடமிருந்து கிடைத்துள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *