‘சிவலிங்கா’ சிங்கிள் ட்ராக் ரிலீஸ் ப்ளான்!

‘முனி 3’ படத்திற்கு பிறகு ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படங்கள் ‘சிவலிங்கா, மொட்ட சிவா கெட்ட சிவா’. இதில் ‘சிவலிங்கா’ படத்தை பி.வாசு இயக்கி வருகிறார். இப்படம் கடந்த வருடம் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த ‘சிவலிங்கா’வின் தமிழ் வெர்ஷனாம்.


லாரன்ஸுக்கு ஜோடியாக ரித்திகா சிங் டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், வைகைபுயல் வடிவேலு, ஷக்தி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ள இதனை ‘ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்’ சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்து வருகிறார். இதன் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் படத்தில் இடம்பெறும் ‘ரங்கு ரக்கர ரக்கர ரக்கர’ எனும் ஒரு பாடலை நாளை (ஜனவரி 3-ஆம் தேதி) ரிலீஸ் செய்யவுள்ளது படக்குழு. படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ‘அக்ராஸ் பிலிம்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *