‘சபாஷ் நாயுடு’வின் ஷூட்டிங் ப்ளான்!

‘தூங்கா வனம்’ படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் பரபரப்பாக ரெடியாகி வரும் படம் ‘சபாஷ் நாயுடு’. இதனை லைகா புரொடக்ஷன்ஸுடன் இணைந்து கமலே தயாரித்து இயக்கி வருகிறார்.


இப்படத்தில் கமலுடன் அவருடைய மகள் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கெனவே அமெரிக்காவில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.


சமீபத்தில், கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார் கமல். தற்போது, ‘சபாஷ் நாயுடு’வின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை இம்மாதம் (ஜனவரி) மூன்றாம் வாரத்தில் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *