சசிகுமார் – சீனு ராமசாமி கைகோர்க்கும் படம்

‘பலே வெள்ளையத்தேவா’ படத்திற்கு பிறகு சசிகுமார் நடித்து வரும் படம் ‘கொடிவீரன்’. ‘குட்டிப்புலி’ இயக்குனர் முத்தையா இயக்கும் இப்படத்தை சசியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கம்பெனி புரொடக்ஷன்’ மூலம் தயாரிக்கிறார். இதனையடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சசிகுமார்.

இதனை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கவுள்ளார். இதை சீனு ராமசாமியே சமூக வலைதளமான ட்விட்டரில் “நடிகர் சசிக்குமாரை சந்தித்தேன் ஒரு கதையும் சொன்னேன் விரைவில் என் படத்தில் அவர் நடிப்பார்” என்று பதிவிட்டு உறுதிபடுத்தியுள்ளார். இதன் தலைப்பு மற்றும் இதர விவரங்கள் விரைவில் வெளியாகுமாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *