ஆந்திரா, கேரளாவிற்கு பறக்கும் ‘துருவங்கள் பதினாறு’!

22 வயதுள்ள அறிமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கி சமீபத்தில் ரிலீஸான படம் ‘துருவங்கள் பதினாறு’. க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படத்தில் நடிகர் ரகுமான் ஹீரோவாக நடித்திருந்தார். ‘க்நைட் நாஸ்டாலஜியா பிலிமோடேயின்மென்ட்’ தயாரித்துள்ள இதனை ‘ட்ரீம் பேக்டரி’ மற்றும் ‘வீனஸ் இன்போடேயின்மென்ட்’ நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டது.

இப்படம் ரசிகர்களிடமும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமன்றி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் மேனன், வெற்றிமாறன் மற்றும் சில நடிகர்களும் பாராட்டி ட்விட்டியுள்ளனர்.

இந்நிலையில், படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். தெலுங்கில் முன்னணி நடிகர் ஒருவர் இங்கு ரகுமான் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். ஆனால், தெலுங்கு வெர்ஷனை கார்த்திக் நரேன் இயக்கவில்லையாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படுமாம். மேலும், தமிழ் வெர்ஷனை வெகு விரைவில் கேரளாவில் ரிலீஸ் செய்வதற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *